Thursday, July 2, 2020

பயங்கரவாதி டிரம்பை கைது செய்ய இன்டர்போல் நடவடிக்கை எடுக்குமா?

Would Interpol Take the Historic Step for Arrest of Trump the Terrorist?

மனிதகுலத்திற்கு எதிராக குற்றமிழைத்த உலகின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவரையும் அவருடன் அவரது கூட்டாளிகளையும் சட்டத்தின் முன் கொண்டுவருவதற்காக சிவப்பு அறிவித்தல் (Red Notice) விடுக்குமாறு சர்வதேச பொலிஸான இன்டர்போலை ஈரான் இஸ்லாமிய குடியரசு கோரியுள்ளது. 

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, புகழ்பெற்ற ஈரானின் லெப்டினன்ட் ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி மற்றும் ஈராக்கின் ஜெனரல் அபு மஹ்தி அல் முஹந்திஸ் ஆகியோர் 2020 ஜனவரி 3 ம் தேதி பாக்தாத்தில் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளின் பிரதான குற்றவாளி டொனால்ட் டிரம்ப் என்பது தெளிவாகத் தெரிகிறது.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த பிடி ஆணை பிறப்பிக்கவும், சர்வதேச நீதிமன்றங்களில் அவர்களைத் தண்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் ஈரானுக்கு முழு உரிமை உண்டு.  இது தொடர்பாக சட்ட மற்றும் முறையான அனைத்து முயற்சிகளையும் ஈரான் தொடரும்.

சர்வதேச குற்றவியல் சட்டத்தின்படி, இனப்படுகொலை, பயங்கரவாதம் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட முக்கிய சர்வதேச குற்றங்களுக்கான வழக்கு பதியப்படுதல், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி வழங்குவதற்கும் அவசியமான முறைமையாகும்.

மாபெரும் குற்றங்களைச் செய்த, அப்பாவி ஜனங்கள் மீது அட்டூழியங்களை ஏற்படுத்திய தலைவர்கள், விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய கோரிக்கையாகும். இத்தகைய குற்றவாளிகள் மீதான வழக்கு தொடர்தல் சர்வதேச முறைமைகளில் நம்பிக்கையை வளர்ப்பதிலும் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஒருபோதும் நன்மை பயக்காது, அதுபோல் சட்டவிரோத செயல்கள் அவர்கள் ஆதிக்கம் செலுத்த முற்படும் மக்களுக்கு விமோசனமளிக்காது மேலும் பயங்கரவாதம் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை என்றென்றும் அடிமைப்படுத்தி வைக்கவும் முடியாது.

இன்று, ஆப்கானிஸ்தானின் பரிதாபகரமான நிலைமைகள், யேமன் மீது சுமத்தப்பட்ட போர், பாலஸ்தீன மக்களின் நிலை, சிரியாவில் குழப்பம், ஈராக்கில் அரசியல் ஸ்திரமின்மை, லெபனானில் நிதி நெருக்கடி, பஹ்ரைனில் இனப்படுகொலை, அரேபியாவில் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் செய்துவரும் துரோகம் மற்றும் லிபியாவின் கொலைக் களங்கள் அனைத்துக்கும் அமெரிக்காவின் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல்களே காரணமாகும்.

மனிதகுலத்திற்கு எதிரான இந்த படுபாதக செயல்களுக்கு  பதிலளிக்கப்பட்டே ஆகவேண்டும். வாஷிங்டன் அதன் பயங்கரவாதத்திற்கு உரிய தண்டனையின்றி தப்பித்துச் செல்ல முடியாது, சுதந்திர உலகிற்கு அது பதில் சொல்லியே ஆக வேண்டிய நேரம் இது. மனித இனத்திற்கு எதிரான செயல்களை தற்போது அமெரிக்காவிலேயே தெளிவாகவே காணக்கூடியதாக இருக்கிறது. ஆப்ரோ-அமெரிக்கர்கள் அவர்களின் தோலின் நிற அடிப்படையில் வெள்ளை மேலாதிக்க நிர்வாகத்தால் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள் என்பது நிதர்சனமாக தெரிகிறது.

அமெரிக்க பயங்கரவாதப் படைகளை எதிர்கொள்ளவும் விரட்டவும் நமது பிராந்திய மக்களுக்கு நிச்சயமாக அதிகாரமும் பலமும் உண்டு; அமேரிக்கா இராணுவ வலிமைகள் கொண்ட நாடு என்று அழைக்கப்பட்டாலும் அது வெல்ல முடியாதது அல்ல. மக்களின் பொறுமை ஏற்கனவே அளவு கடந்துள்ள நிலையில் வல்லாதிக்க சக்திகளுக்கு எதிரான குரல்கள் ஆங்காங்கே மெல்லியதாக கேட்கத் துவங்கியுள்ளன. இந்நிலை தொடர்ந்தால், எல்லா நகரங்களிலும் அமெரிக்கர்களுக்கு எதிரான மக்களின் கோபம் கட்டுக்கடங்காமல் போய்விடும்.

லெப்டினன்ட் ஜெனரல் சுலைமானி, ஜெனரல் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் மற்றும் அவர்களது தோழர்கள் ஆகியோருக்கு "தியாகி" என்ற வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம். அமெரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இந்த இறையச்சம் கொண்ட மனிதர்களைக் கொல்ல ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் கட்டளையிட்டார் என்பது அவரே ஏற்றுக்கொண்ட விடயமாகும். தீய அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அரச பயங்கரவாதத்தின் பிரதான குற்றங்களில் ஒன்று இது என்பது வெளிப்படையானது. (இதன் மூலம் சர்வதேச சட்டம், மனிதாபிமான விழுமியங்கள் மற்றும் மேற்கத்திய மக்கள் கடைபிடிக்க வேண்டிய கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைகளை அவர் அப்பட்டமாக மீறியுள்ளார்). மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பான அம்மனிதனை, ஒரு கொலைகாரனை கண்டிப்பாக தண்டனைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும்.

கொல்லப்பட்ட தியாகிகளின் புனிதமான வாழ்க்கைக்கு இந்த 74 வயதான தரம்கெட்ட மனிதர், நிச்சயமாக, முற்றிலும் மாறுபட்ட ஒருவர். பொய் சொல்லுதல், அடுத்தவரின் செல்வத்தை அபகரிக்கும் ஆசை, விபச்சாரம் மற்றும் சிவில் மற்றும் தெய்வீக சட்டங்களுக்கு கீழ்ப்படியாமை உள்ளிட்ட பெரும் பாவங்களில் தனது முழு வாழ்க்கையையும் கழித்திருக்கிறார். நிச்சயமாக நரகத்தின் நெருப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நபரே, என்றாலும் அவரது பரிதாபகரமான வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னர் இந்த உலக நீதியின் அடிப்படையில் அவருக்கு தகுதியான தண்டனையை வழங்கப்பட வேண்டும்.

ஈரானிய மற்றும் ஈராக்கிய மக்களும், சிரியாவின் கிறிஸ்தவர்கள் உட்பட தங்கள் மரியாதை, கௌரவம், நம்பிக்கை, மத வழிபாடுகள், கலாச்சார விழுமியங்கள், வரலாற்று பாரம்பரியம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து  சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்க உதவியவர் என்ற அடிப்படையில் ஜெனரல் சுலைமானியின் கொலைக்காக, அவரால் உதவி செய்யப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் பதிலடி கொடுக்கும் உரிமை உண்டு.

அதேபோல், ஈராக்கும் ஈராக்கிய மக்களும், அமெரிக்க அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காது, தமது நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக, தமது உயர்மட்ட இராணுவத் தலைவர்களை படுகொலை செய்தமைக்காக, தமது நாட்டின் இறைமையை மீறிய குற்றத்திற்காக டிரம்பிற்கும் அவரது குற்றவாளி கூட்டாளிகளுக்கும் எதிராக இதேபோன்ற பிடி ஆணை பிறப்பிக்க முடியும்.

அனைத்து சென்ட்காம் (CENTCOM) பயங்கரவாதிகளையும் ஈராக் மண்ணிலிருந்து வெளியேற்றுவதற்கான தமது உரிமையை பாக்தாத்தில் உள்ள அரசாங்கம் பயன்படுத்த வேண்டும், மேலும் ஈராக்கை விட்டு வெளியேறுவதில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் ஏதேனும் தயக்கம் காட்டினால், ஈராக் மக்களுக்கு அமெரிக்கப் படைகளை அடித்துத் துரத்த உரிமை உண்டு என்பதையும் அவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

http://kayhan.ir/en/news/80074/would-interpol-take-the-historic-step-for-arrest-of-trump-the-terrorist

 


No comments:

Post a Comment