Thursday, May 14, 2020

வரலாற்றுத் துரோகத்தை நினைவுகூரும் "நக்பா தினம்"

"Nakba Day" commemorating the historic treachery
 "நக்பா" என்பது "பேரழிவு" என்பதற்கான அரபு வார்த்தையாகும். 1948 ஆம் ஆண்டில் 700,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் நக்பா தினம் என்று அழைக்கப்படுகிறது.

72 வது ஆண்டு நக்பா தினத்தின்” (பேரழிவு நாள்) நிறைவைக் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாலஸ்தீனர்கள் மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்தையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அடிமைப்படுத்தும் மத்தியகிழக்கு நூற்றாண்டு சமாதானத் திட்டத்தையும் முறியடித்து, பாலஸ்தீனியர்களின் முழுமையான விடுதலையை அடைவோம் என்று  இன்று மே 14, 2020 வியாழக்கிழமை உறுதிபூண்டனர்.

UN: Israeli annexation plans 'entirely unacceptable'

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் குறிப்பிடத்தக்க பகுதிகளை இணைப்பதற்கான புதிய இஸ்ரேலிய கூட்டணி அரசாங்கத்தின் திட்டம் சர்வதேச ஒழுங்கிற்கு ஒரு அடியாக இருக்கும் என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதற்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர் மைக்கேல் லிங்க் எச்சரித்தார். "திட்டமிடப்பட்ட இணைப்போடு ஒருதலைப்பட்சமாக முன்னேற ஜூலை 1 ம் தேதி இஸ்ரேல் எடுத்த முடிவு பிராந்தியத்தில் மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, மேலும் இது விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கிற்கு கடுமையான கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தில் உரிமைகள் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் லிங்க் கூறினார்.

இஸ்ரேலின் இணைப்புத் திட்டங்கள் அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டு வசதி செய்யப்படுகின்றன என்று லிங்க் எச்சரிக்கை தெரிவித்தார்.

இணைப்புத் திட்டங்கள் தொடர்ந்தால், மேற்குக் கரையில் எஞ்சியிருப்பது "பாலஸ்தீனிய பண்டுஸ்தான்" ஆக மாறும், இது துண்டிக்கப்பட்ட பிரதேசங்கள் ஒரு தீவுக்கூட்டம் போன்று, வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இஸ்ரேலால் சூழப்பட்டும்  நிலை உருவாகிவிடும் என்றும், சிறப்பு அறிக்கையாளர் மேலும் கூறினார்.

இந்த இணைப்பு திட்டத்தில் ஜோர்டான் பள்ளத்தாக்கும் அடங்கும், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், "மோசமான மனித உரிமை விளைவுகளின் அடுக்கிற்கு" வழிவகுக்கும்.

இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதானது ஒரு நியாயமான மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான மீதமுள்ள எந்தவொரு வாய்ப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், என்று அவர் கூறினார்.  "இந்த திட்டம் 21 ஆம் நூற்றாண்டின் இனவெறியை உறுதியாக்கும், மேலும் பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். சட்டரீதியாக, ஒழுக்க ரீதியாக, அரசியல் ரீதியாக இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து எழும் மனித உரிமை மீறல்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் இணைக்கப்பட்ட பின்னரே தீவிரமடையும், என்று லிங்க் கூறினார். "ஏற்கனவே, கட்டாய வெளியேற்றங்கள் மற்றும் இடம்பெயர்வு, நிலம் பறிமுதல் மற்றும் அந்நியப்படுதல், குடியேற்ற வன்முறை, இயற்கை வளங்களை கையகப்படுத்துதல் மற்றும் இனத்தின் அடிப்படையில் சமமற்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் என்ற இரு அடுக்கு முறை சுமத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம்."

ஐ.நா. நிபுணர் 1945 இல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து பலவந்தமாக இணைப்பது சர்வதேச சட்டத்தின் கீழ் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.

ஒரு தலைமுறைக்குள் நடந்த இரண்டு உலகப் போர்களின் கசப்பான படிப்பினைகளிலிருந்து, சர்வதேச சமூகம் இணைப்பதை தடைசெய்தது, ஏனெனில் அது மோதல்கள், பரந்த மனித பேரவலங்கள், அரசியல் உறுதியற்ற தன்மை, பொருளாதார அழிவு மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடு ஆகியவற்றை உருவாக்குகிறது.

1967 முதல், ஐ.நா.பாதுகாப்பு சபை படை பலத்தை பயன்படுத்தி அல்லது போரினால் "பிரதேசத்தை கையகப்படுத்தும்" கொள்கையை நிராகரித்து வந்துள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்த பல சந்தர்ப்பங்களில் அது கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

"நமது நவீன சர்வதேச சட்ட முறையை உருவாக்குவதற்கு போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அமெரிக்கா பல முனைகளில், ஒரு சாதகமான சக்தியாக இருந்துவந்துள்ளது." உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கான சிறந்த பாதை, உரிமைகள் மற்றும் பொறுப்புகளின் வலுவான வலையமைப்பு என்பதை அது புரிந்துகொண்டும் இருத்தது. ஆனால் இப்போது, அமேரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை தனிமைப்படுத்தும் அதன் தார்மீக பொறுப்பிலிருந்து மீறி, அப்பட்டமான சர்வதேச சட்ட மீறலுக்கு தீவிரமாக ஒப்புதல் அளித்து வருகிறது.

Greater Israel is the objective as Netanyahu plans to wipe Palestine off the map

இது தொடர்பாக ஊடகவியலாளர் யிவோன் ரிட்லி (Yvonne Ridley) தனது கட்டுரையில் பின்வருமாறு விவரிக்கிறார்:

பாலஸ்தீனத்தை உலக வரைபடத்திலிருந்து அழித்து மகா இஸ்ரேலை அமைப்பதே நெத்தன்யாகுவின் நோக்கம் ஆகும்.

பாலஸ்தீன் மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பாக, உலகத் தலைவர்களும், மேற்கத்திய ஊடகவியலாளர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அவர்களது பார்வையை அதிதிலிருந்து அகற்றியுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வினோதமான கருத்துக்களும், கோவிட் -19 ஐ அவர் கையாண்ட விதமும்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலக ஊடகங்களின் கவனம் வேறு பக்கம் திரும்பியிருக்கையில், எப்போதும் போலவே, இஸ்ரேல் ஒரு பேரழிவு சூழ்நிலையை அதன் தீங்கு விளைவிக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக மாற்றியுள்ளது. பரம அரசியல் போட்டியாளர்களான பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பென்னி காண்ட்ஸ் ஆகியோர் பாலஸ்தீனத்தின் மேலும் 30 சதவீதத்தை அபகரிக்கப் போகிறார்கள், இரு மாநில தீர்வின் எந்தவொரு யதார்த்தமான வாய்ப்பையும் முற்றாக அழிக்கப் பார்க்கிறார்கள்.


புதிய இஸ்ரேலிய அரசாங்கம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அதன் முழுக்கவனமும் கோவிட் -19 க்கு எதிரான போராட்டமாக இருக்கும் என்று கூறுகிறதுநிச்சயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன நிலங்களை அபகரிப்பதைத் தவிர என்றே கூறப்பட வேண்டும். உலகின் கவனத்தைக் கோரும் எது நடந்தாலும் இஸ்ரேலுக்கு அது  முக்கியமல்ல,  "பாலஸ்தீனத்தையும் அதன் மக்களையும் அழிப்பதற்கு" எப்போதுமே கையாளும் மிருகத்தனமான வழியில் செல்வதற்கான  நேரத்தையும் வளத்தையும் அது எவ்வாறாயினும் கண்டுபிடித்துக்கொள்ளும்.

தொற்றுநோய் மற்றும் ட்ரம்பின் வெறித்தனமான செயல்களுக்கு அப்பால் கவனம் செலுத்தக்கூடிய கெபிடல் ஹில்லில் உள்ள சில பத்திரிகையாளர்களில் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜாக்சன் டீலும் ஒருவர். இந்த வாரம் ஒரு கருத்துத் தொகுப்பில் அவர், ஜூலை 1 முதல் நெத்தன்யாகு மேற்குக் கரையில் 30 சதவீதத்துக்கும் அதிகமானதை இஸ்ரேல் அதனுடன் இணைப்பது குறித்து தனது அமைச்சரவை அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியை வேண்டி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.. மேற்குக் கரை என்பது பலஸ்தீன் அதிகாரத்துக்கு உட்பட்ட, பெரும்பான்மையான பாலஸ்தீனிய மக்கள் வாழ்கின்ற பகுதியாகும்,” என்று குறிப்பிடுகின்றார்.

அதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளது என்பதை டீல் சுட்டிக்காட்டுகின்றார்: நெதன்யாகு அமெரிக்காவுடன் முழு இணக்கத்துடன்செயல்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தனது நற்பு நாடான இஸ்ரேல் வாக்கெடுப்பை தொடர முடியுமா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் டிரம்பிற்கு இருக்கும், அவ்வாக்கெடுப்பில் அவர் வெல்லவும் கூடும், அவ்வாறு நடந்தால் இஸ்ரேலின் (பூகோள) தன்மையை அது மாற்றிவிடும்,என்றும் டீல் கூறுகின்றார்.

அத்தகைய நடவடிக்கை பாலஸ்தீன மற்றும் அதன் மக்களின் தன்மையை நிரந்தரமாக மாற்றிவிடும். (இது தொடர்பாக அரபு ஆட்சியாளர் எந்த அக்கறையுமில்லாமல் இருக்கின்றனர். ஆனால் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் எப்போதும் போல் ஈரான் இஸ்லாமிய குடியரசு அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.)  நெத்தன்யாகுவின் ஆட்சியின் கீழ் பல ஆண்டுகளாக, உலகமும் உலக ஊடகங்களும் பார்த்திருக்க, இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனிய நிலங்களைத் அபகரித்து, சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை உருவாக்கி வருகிறது. ஐ.நா. வெளியிட்ட ஏராளமான கண்டனங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை; இஸ்ரேல் அவற்றை  முற்றிலும் புறக்கணித்து, தண்டனையின்றி செயல்பட்டு வருகிறது.

இஸ்ரேல் ஐ.நா. தீர்மானங்களை மீறியதை போல் உலகில் வேறு எந்த நாடும் மீறியது கிடையாது, ஆனால் இந்த சமீபத்திய நடவடிக்கை சண்டித்தனம் காட்டும் எந்த அரசினதும் ஏற்றுக்கொள்ள முடியாத, எல்லை மீறிய செயலாகும். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைப்பது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அப்பட்டமான அடாவடித்தனமாகும்; பாலஸ்தீனர்களின் விருப்பு, வெறுப்புக்கு இங்கு மதிப்பளிக்கப்படவில்லை.

டிரம்பின் "நூற்றாண்டின் ஒப்பந்தம்" என்று அழைக்கப்படுவது ஒரு "சமாதான திட்டம்" என்று உலகுக்கு விற்கப்பட்டது, ஆயினும் இது பலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுடன் இணைப்பதற்கு பச்சைக் கொடி காட்டும் திட்டமாகும். அது ஏற்கனவே பல நிலங்களைத் அபகரித்து காலனித்துவப்படுத்தியிருக்கும் நிலையில், "பாலஸ்தீனத்திற்கு" என  எஞ்சியிருக்கப்போகும் குறுகிய நிலத்தைக் கொண்டு அது இனி ஒரு சுதந்திர நாடாக ஆகும் சாத்தியமில்லை. அமெரிக்க ஜனாதிபதியின் அனைத்து திட்டங்களையும் போலவே, அவரது மூலோபாய திட்டமிடலான நூற்றாண்டு ஒப்பந்தத்தில், எல்லா நிலையிலும், இஸ்ரேலுக்கு பயனளிக்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படை.

பாலஸ்தீனர்கள் இஸ்ரேலால் சூழப்பட்ட சிறுசிறு குழுக்களாக தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கிக் கொண்டிருப்பர்,  உண்மையில் அதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?

உலகம் வைரஸ் நெருக்கடியில் மூழ்கியுள்ள இவ்வேளை, ஈரானுக்கு அடுத்தபடியாக, துருக்கி இப்போது பலஸ்தீன் விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது போல் தெரிகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைப்பதற்கான இஸ்ரேலின் திட்டத்தை துருக்கி கண்டிப்பதாக அதன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹமி அக்சோய் கூறியுள்ளார். இது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நிலங்களை "அச்சுறுத்தி அபகரிக்கும் நோக்கில் மிகவும் ஆபத்தான நிலையை உருவாக்கியுள்ளது" என்றும் "சர்வதேச சட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் மனிதகுலத்தின் பொதுவான மனசாட்சியைக் காயப்படுத்தும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள், நீதி மற்றும் பொறுப்புணர்வு கொண்ட சர்வதேச சமூகத்தின் எந்தவொரு உறுப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படவோ ஆதரிக்கப்படவோ மாட்டாது என்று நாங்கள் நம்புகிறோம்." என்றும் அவர் விவரித்துள்ளார்.

"மேற்குக் கரையை இணைப்பதில் அமெரிக்க நிலைப்பாடு சட்டவிரோதமானது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என்று ஹமாஸ் ஊடகத் தலைவர் ரஃபாத் முர்ரா அனடோலு நியூஸ் ஏஜென்சிக்கு தெரிவித்தார். "இது பாலஸ்தீன மக்களின் வரலாற்று உரிமைகளை புறக்கணிக்கிறது, பாலஸ்தீன பிரச்சினையை முற்றுமுழுதாக புறக்கணிக்கிறது," என்றும் கூறினார்.

குறிப்பிட்ட இந்த இணைப்பு திட்டத்தால் ஹமாஸ் கடும் சீற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் இணைப்பதை ஆதரிப்பதாக வெள்ளிக்கிழமை அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோவினது, தனது எஜமானர் டிரம்ப்பைப் போலவே, பொறுப்பற்ற அறியாமையைக் காட்டிய வார்த்தைகளால் ஹமாஸ் இயக்கத்தின் கோபம் அதிகரித்துள்ளது.

ரஃபாத் முர்ரா பாலஸ்தீனியர்களை ஒன்றிணைத்து அமெரிக்க நிலைப்பாட்டை எதிர்கொள்ள நீதி நியாயத்தை மதிக்கும் உலகு  ஒன்றாக நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். துரதிர்ஷ்டவசமாக, கணிக்கத்தக்க வகையில், பலவீனமான பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், 84, இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் "பொருத்தமான நடவடிக்கைகளை" எடுப்பேன் என்று கூறினார். அபபாஸின் பதில், பலவீனமானது என்று நோக்கர்கள் தெரிவித்தனர்; அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் முறித்துவிடுவதாக அவர் அச்சுறுத்தியது அமரிக்காவும் இஸ்ரேலும் எதிர்பார்க்கும் செயலாகும்.

இஸ்ரேலின் இந்த அடாவடித்தனத்தை தடுத்துநிறுத்த உலகின் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான நடவடிக்கையே இப்போது அவசியமாகும்.

No comments:

Post a Comment