Tuesday, March 31, 2020

மனித இனத்தின் பாதுகாப்புக்காக ஈரான் மீதான தடைகளை அமேரிக்கா நீக்க வேண்டும்.


US must remove sanctions on Iran for the protection of humanity.

COVID-19 ஐ எதிர்த்துப் போராட அமேரிக்கா மற்ற நாடுகளிடம் உதவி கோருகையில், ஈரான் மீதான அதனது பொருளாதார பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர மறுக்கிறது: ஸரீஃப்


கோவிட்-19 எந்த நாட்டையும் விட்டுவைக்காமல் உலகை அச்சுறுத்துகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமேரிக்கா கூட தொற்றுநோயை எதிர்த்துப் போராட மற்றவர்கள்  உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக்கொண்டு இருக்கிறது, ஆனால் ஈரானுக்கு எதிரான அதன் பொருளாதார பயங்கரவாதத்தை நிறுத்த மறுக்கிறதுஎன்று என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஸரீஃப் தெரிவித்துள்ளார்.

தென் கொரிய ஜனாதிபதியின் 'நீல மாளிகை' விடுத்த ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது; அதன்படி கொரோனா வைரஸை எதிர்த்து போராட மருத்துவ உபகரணங்களை அனுப்புமாறு தென் கொரியாவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கொடிய கொரோனா வைரஸ் ஈரானில் பாரிய சேதத்தை ஏற்படுத்தி வருவதால், ஈரானுக்கு எதிரான அமெரிக்க சட்டவிரோத பொருளாதாரத் தடைகளுக்கு உலகளாவிய எதிர்ப்பு தீவிரமடைந்து வருகிறது. 

ஈரானில் 2020 மார்ச் 30ம் திகதி வரை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,495 ஐ எட்டியுள்ளது, அவர்களில் 2,757 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான மிருகத்தனமான அமெரிக்க பொருளாதாரத் தடையை மேலும் விஸ்தரித்துள்ளார்.

கொரோனா பரம்பலை எதிர்ப்பதற்கான ஈரானின் முயற்சிகள் அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக கடுமையாக தடைபட்டுள்ளதாக தெஹ்ரான் கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், செவ்வாயன்று, ஈரான் போன்ற நாடுகளுக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ளும் சகலவிதமான (அமெரிக்க) தடைகளையும் மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ முறைகள் வீழ்ச்சிக்கு தள்ளப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

"இந்த இக்கட்டான சமயத்தில், உலகளாவிய பொது சுகாதார காரணங்களுக்காகவும், இந்த நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உயிர் வாழ் உரிமை உட்பட அனைத்து உரிமைகளை காப்பதற்கும், தடைகள் தளர்த்தப்பட வேண்டும் அல்லது இடைநிறுத்தப்பட வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"உலகளாவிய தொற்றுநோயின் சூழலில், ஒரு நாட்டில் மருத்துவ முயற்சிகளைத் தடுப்பது நம் அனைவருக்கும் உயிர் ஆபத்தை அதிகரிக்கிறது," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈரானின் முயற்சியில் பெரும் பாதிப்பு 

கொடிய வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள், பல ஈரானியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், அது முழு உலகையும் பாதிக்கும் என்று ஐ.நா.வுக்கான ஈரானிய தூதுவர் ராவஞ்சி, எச்சரித்தார்.
"ஈரானிய வர்த்தகத்தில் கடுமையான அமெரிக்க தலையீடு கொரோனா தொற்றுநோயைச் சமாளிக்கும் ஈரானின் முயற்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது."

உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இந்த கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் பறித்துவிட்டது. இந்த வைரசுக்கு எதிராக  உலக மக்கள் போராடுகிறார்கள், பல நாடுகளில் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் மக்கள் சவாலை எதிர்கொள்ள போராடுகிறார்கள், ஆயினும் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து அவர்களால் விடுபடவில்லை.

உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸை ஒரு தொற்றுநோய் என்று கூறியுள்ளது. இதை எதிர்கொள்ள பல நாடுகள் பல பில்லியன் டாலர்களை செலவிடுகின்றன. இந்த வைரஸின் வீரியம் எப்போது அடங்கும் என்பதிலும் எந்த தெளிவும் இல்லை. அதன் பங்கிற்கு, ஈரானும் வைரஸைத் தோற்கடிப்பதற்காக வளங்களைத் திரட்ட போராடுகிறது. எவ்வாறாயினும், ஈரானிய மக்கள் மீது சுமத்தப்பட்ட அநியாய அமெரிக்க பொருளாதாரத் தடைகள் காரணமாக அதைக் திறம்பட கையாள்வதற்கான ஈரானின் திறன் குறைவாக வே உள்ளது.

ஈரானிய அணுசக்தி ஒப்பந்தமான ஜே.சி.பி.ஓ.ஏ-வில் இருந்து அமெரிக்கா தன்னிச்சையாக விலகி 22 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது என்பது மட்டுமல்லாமல் ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பொருளாதாரத் தடை விதித்தது. இதனால் சாதாரண ஈரானிய மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்; குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட மருந்தின் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படை தேவைக்கான மனிதாபிமான பொருட்கள் அதன் பொருளாதாரத் தடைகளுக்கு உட்படவில்லை என்று அமேரிக்கா கூறினாலும், அது உண்மை அல்ல. அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்கான பணப்பரிமாற்றம் செய்வதற்கு எந்த ஒரு வழியுமில்லை. மனிதாபிமான பொருட்களுக்காகக் கூட, அமெரிக்க தடையை மீறுவதாக கண்டறிந்தால் தாங்கள் அமேரிக்க பழிவாங்கலுக்கு உள்ளாவோம் என்று நிதி பரிவர்த்தனை நிறுவனங்களை அச்சப்படுகின்றன.

ஈரானுடனான மனிதாபிமான வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட சுவிஸ் சேனல் என்று அழைக்கப்படுவது கூட சரியாக இயங்குவதில்லை.  ஈரானுக்கு வெளியே அதன் சொத்துக்கள், வங்கி இருப்புகள் முடக்கப்பட்டுள்ள காரணத்தினால் சுவிஸ் வங்கிக்கு மாற்றுவதில் பரிவர்த்தனை சிக்கல் காணப்படுகின்றது. இதன் காரணமாக சுவிஸ் சேனல் சரியாக செயல்படவில்லை. மேலும், ஈரானிய சர்வதேச வர்த்தக நடவடிக்கையில் அமெரிக்க தலையீடு, எங்கள் வெளிநாட்டு நாணய இருப்புக்களை மேலும் வடிகட்டுகிறது, இந்த சேனல் உண்மையில் சில மாதங்களில் அவசியமற்ற ஒன்றாக ஆகலாம். ஈரானியர்கள் துயரத்தில் அமெரிக்காவுக்கு எந்த அக்கறையும் கிடையாது. அவர்கள் மனிதாபிமானம் பற்றி பேசுவதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்க ளே அன்றி வேறில்லை.

இன்று, முழு உலகும் கொரோனா வைரஸால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. எந்தவொரு நாடும் அதன் அச்சுறுத்தலிலிருந்து விடுபடுபட்டுள்ளதாக கூற முடியாது. இது ஒரு சர்வதேச அச்சுறுத்தலாகும், இந்த வைரஸ் எல்லா பௌதிக எல்லைகளை கடந்துகொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த சர்வதேச செயற்பாடு அவசியமாகும். அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள மருத்துவ உபகரணங்கள் உட்பட கடுமையான பொருளாதாரத் தடைகள், வைரஸைக் கட்டுப்படுத்தும் ஈரானின் முயற்சிகளை மோசமாக பாதித்துள்ளன. எனவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஈரானிடம் சிறந்த மருத்துவ திறன்கள் இருந்தபோதிலும், அது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாகும்.  உண்மையில், கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்தும் வசதிகள், மற்றவர்களை விட ஈரான்  குறைவாகவே கொண்டிருக்கிறது.

இன்று நாடுகள் முன்பை விட ஒன்றையொன்று அதிகம் சார்ந்திருக்கின்றன. உலகம் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களுக்கு சர்வதேச அளவில் அதிக ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவை. இந்த சூழலில், எந்த நாடும் இந்த சவால்களை தனித்து எதிர்கொள்ளவோ அல்லது அவற்றின் விளைவுகளை தனித்து சமாளிக்கவோ முடியாது. எல்லா நாடுகளும்,  ஒரே படகில், அடிக்கடி புயல் வீசும் கடல்களில் பயணம் செய்கின்றன. ஒன்றோ நாம் ஒன்றாக போராடி வெற்றி பெறுவோம், அல்லது நாம் ஒன்றாகவே பாதிக்கப்பட்டு இழப்புகளை சந்திப்போம்.  இதுவே யதார்த்தம்.

ஈரான் மீதான சட்டவிரோத அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் தொடர்ச்சியானது நோயைக் கட்டுப்படுத்தும் ஈரானின் திறனை எதிர்மறையாக பாதிக்கும். இந்த பயனற்ற அமெரிக்க கொள்கையின் விளைவாக ஈரானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள், அதேபோல் - நலன்களில் ஒன்றோடொன்று இணைந்த நமது கிரகத்தில் உள்ள - மற்ற நாடுகளும் ஈரானுடன் சேர்ந்து பாதிப்புகளுக்கு உள்ளாகும். அமேரிக்கா ஒழுக்கக்கேடான அதன் பொருளாதாரத் தடைக் கொள்கையைத் தொடர வலியுறுத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது மட்டுமல்லாமல், ஈரானில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பலரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

கொரோனா வைரஸின் பரவலைத் தணிக்க அமேரிக்கா இப்போது செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயங்களிலொன்று ஈரானுக்கு எதிரான அதன் பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக்கும். இது ஈரானிய பொது மற்றும் தனியார் துறைகளுக்கு வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான ஆதாரங்களைக் கொண்டிருக்க வழிவகுக்கும். அமேரிக்கா தார்மீக மற்றும் சட்டபூர்வமான கடமைகளுக்கு உட்பட்டுள்ளது, அதை விரைவில் செய்ய வேண்டும். ஈரான் மீதான தடைகளை நீக்குவது ஈரானியர்களுக்கு மட்டுமல்ல, முழு மனிதகுலத்திற்கும் பாதுகாப்பாக அமையும்.



No comments:

Post a Comment