Vakil Mosque adds beauty to beautiful Shiraz
பிருஸேஹ் மிர்ராஸாவி
வடிவமைப்பு மற்றும்
கண்ணைப்பறிக்கும் அசாதாரணமாக அழகாக இருப்பதாகக் கூறக்கூடிய வழிபாட்டுத் தலங்கள்
உலகம் முழுவதும் உள்ளன. தெற்கு ஈரானின் ஷிராஸில் நகரில் அமைந்துள்ள வாகில் மஸ்ஜித்
அதுபோன்றதொன்றே.
ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு
பயணம் மேற்கொள்ளும் எவரும் தவறாது விஜயம் செய்ய வேண்டிய இடங்களில் ஷிராஸ் நகரமும்
ஒன்றாகும். ஈரானின் தென்மேற்கில் கோஷ்க் பருவகால ஆற்றின் அருகில், அழகே உருவான இந்த நகரம் அமைந்துள்ளது. ஷிராஸ் ஒரு
மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது மற்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பிராந்திய
வர்த்தக மையமாகவும் இருந்து வருகிறது.
'டிராசிஸ்' என்று அழைக்கப்பட்ட
இந்த நகர் தொடர்பான களிமண் அச்சுகளில் பதியப்பட்டுள்ள குறிப்புகள் கிமு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஷிராஸ்
நகரம் 13 ஆம் நூற்றாண்டில், கலை
மற்றும் கல்வியின் முன்னணி மையமாக மாறியது. பல கல்விமான்களை பெற்றெடுத்த இந்த
நகரின் வளர்ச்சியில் அக்கால ஆட்சியாளர்கள் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளனர்.
ஷிராஸ் 1750 முதல் 1781 வரை ஸாந் வம்ச
ஆட்சியின்போது பாரசீகத்தின் தலைநகராக
இருந்துள்ளது. சபாவித் ஆட்சியின் போதும் குறுகிய காலம் இது தலைநகராக இருந்துள்ளது.
ஷிராஸ் கவிஞர்களின், இலக்கிய நகரம், பூக்களின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. பாரசீக மொழியில்
"ஷிர்" என்ற வார்த்தையின் அர்த்தம் "சிங்கம்", ஆனால் அதற்கு "பால்" என்றும் பொருள் உண்டு. நகரத்தில்
காணக்கூடிய பல தோட்டங்கள் மற்றும் பழ மரங்கள் காரணமாக இது ஈரானியர்களால்
தோட்டங்களின் நகரமாக கருதப்படுகிறது.
ஸாந் காலத்திலிருந்தே இருந்து
வந்த மிக முக்கியமான கலைத்துவமிக்க மற்றும் வரலாற்று கட்டிடங்களில் ஒன்று வாக்கில்
மஸ்ஜித் ஆகும், இது சுல்தானி
மஸ்ஜித் என்றும் ஜாமே வாக்கில் மஸ்ஜித்
என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தொழுகைக்கான இடமாக
பயன்படுத்தப்பட்டது.
இந்த மஸ்ஜித் கரீம் கான் ஸாந் அரச
அரண்மனைக்கு அருகிலும், ஸாந்டியே
வளாகத்திலும் கட்டப்பட்டது. இப்போது சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகும்
கூட இந்த கட்டிடம் கம்பீரமாக காட்சி தருகிறது.
இந்த மஸ்ஜித் 1751 மற்றும் 1773 க்கு
இடையில், ஸாந்
காலத்தில் கட்டப்பட்டு 19 ஆம் நூற்றாண்டில் கஜார்
காலத்தில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த கட்டிடத்தில் உள்ள ஓட்டு
வேலைப்பாடுகள் ஈரானிய ஓட்டு
தொழிலாளர்களினதும் மற்றும் ஓவியர்களினதும் கைவண்ணத்தில் உருவான கலைவண்ணத்தை
எடுத்துக்காட்டும் அதி சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.
வக்கீல் என்றால் ஆளுநர் என்று
பொருள், இது ஸாந் வம்சத்தின் நிறுவனர் கரீம் கான்
இப்பெயர்கொண்டு அழைக்கப்படுவதையே விரும்பினார். ஷிராஸ் கரீம் கானின் அதிகாரத்துக்கு
உட்பட்ட பிரதேசமாக இருந்தது. கலைப்பிரியரான அவரின் ஆட்சி காலத்தில் இந்த மஸ்ஜித் உட்பட பல அழகிய கட்டிடங்கள்
கட்டப்பட்டன. வக்கில் மஸ்ஜித் 8,660 சதுர மீட்டர் பரப்பளவைக்
கொண்டுள்ளது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஷிராஸின் கலை
மற்றும் கட்டட தொழில்துறையின் சிறப்பியல்பு ஓடு பதித்தலாகும். அம்சமான ஷிராசி
ஹாஃப்ட் ரங்கி ஓடுகளால் மாடங்களும் மற்றும் அரசவையும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அதன் இரவுநேர தொழுகை பகுதி அல்லது
2700 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஷபேஸ்தான் (இரவு
பிரார்த்தனை மண்டபம்). இது அழகிய மாடம் மற்றும் பளிங்கினாலான மேடை, ஒத்த உயரமான 48 கல் தூண்கள் இங்கு உள்ளன.
மஸ்ஜித் இ வகில் அதன் பெரிய
தொழுகை மண்டபத்திற்கு (75 மீட்டர்
நீளம், 36 மீட்டர் அகலம்) இது ஒரு ஒற்றை கல் வெட்டப்பட்ட
நாற்பத்தெட்டு முறுக்கப்பட்ட தூண்களின் மீது எழுப்பப்பட்டுள்ளது.
வக்கீல் மஸ்ஜிதின் நுழைவாயில்
மிகவும் கலைரீதியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது மற்றும் இடது மற்றும் வலது
தாழ்வாரங்களால் இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளது. இங்கு நுழைந்ததும், நீங்கள் ஒரு மேடையைக் கொண்ட கொண்ட பிரதான அறைக்கு
இட்டு செல்லப்படுகிறீர்கள். பச்சை பளிங்குகள்
பதிக்கப்பட்ட ஒரு உயரமான பிரசங்க மேடை
(மிம்பர்) உங்கள் கண்களை ஈர்க்கும். அந்த உயரமான அழகிய மிம்பர் மீதேறியே
தொழுகை நடத்துனர் அனைத்து மக்களையும் விழித்து உரை நிகழ்த்துவார்.
மஸ்ஜிதுக்குள் இருக்கும் அமைதியான
சூழல் மனா நிம்மதியை தரக்கூடியது. கடந்த காலங்களில் தங்கள் பிரார்த்தனைகளைச் செய்ய
அங்கு கூடியிருந்த மக்கள் பற்றியெல்லாம் நீங்கள் கற்பனையில் சஞ்சரிப்பீர்கள்.
மஸ்ஜிதின் நுழைவு வாயிலில் கண்களை
கவரும் விதத்தில் ‘சோல்ஸ்’ மற்றும் ‘நோசாக்’ எழுத்து
வடிவில் எழுதப்பட்டுள்ள புனித குர் ஆன் வசனங்களை கவனிக்கும் நீங்கள்
பிரமித்துப்போவீர்கள்; அவ்வளவு கலையம்சம் பொருந்தியது.
மிகவும் நுட்பமாக
செதுக்கப்பட்டுள்ள கலையம்சம் பொருந்திய வேலைப்பாடுகள் கட்டட கலைஞர்களின் அர்ப்பணிப்பு அவர்களின்
வேலையின் சிக்கலான தன்மையைக் கண்டு நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள்.
சுத்தியல் மற்றும் உளி கொண்டு
வடிவமைக்கக்கூடிய ஒவ்வொரு மேற்பரப்பும் ஏதோ ஒரு வடிவத்தைக்கொண்டு
நிரப்பப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த விளைவு, சொல்லில் அடக்க முடியாதது.
கைவினைத்திறன் மிகவும் வலுவாகவும், திடமாகவும் இருந்ததால், இப்பகுதியில்
ஏற்பட்ட பூகம்பங்களின் அழிவைத் மஸ்ஜித் தாங்கிக்கொண்டது. இது ஸாந் சகாப்தத்தில்
கைவினைஞர்களின் திறமைக்கு சாட்சியம் அளிக்கிறது.
பண்டைய வக்கீல் மஸ்ஜிதை பராமரிக்க
சமீபத்திய காலங்களில் நிறைய சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மஸ்ஜிதை நல்ல நிலையில் வைத்திருக்க ஓடு வேலைகள், ஒளியூட்டல்
அமைப்புகள், பிளாஸ்டர் பணிகள், முற்றத்தின்
தளம் மற்றும் இது போன்ற அனைத்து அம்சங்களிலும் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க இக்கட்டிடம் சுமார் 76 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய
பாரம்பரியமாக பதிவு செய்யப்பட்டது. ஃபார்ஸ் கலாச்சார பாரம்பரியம்,
கைவினைப்பொருட்கள் மற்றும் சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி,
தரையின் கற்கள் மற்றும் ஓடு வேலைகள் புதுப்பிக்கப்பட்டன, உட்புறத்தின் விளக்கு அமைப்பு மேம்படுத்தப்பட்டது, இரவு
நேர பிரார்த்தனை அறைகளின் வெளிப்புறம் புதுப்பிக்கப்பட்டு, பிளாஸ்டர்வொர்க்குகள்
மேம்படுத்தப்பட்டன.
இந்த இடம், ஆச்சரியப்படத்தக்க வகையில், ஒரு
பிரபலமான சுற்றுலாத் தலமாகும், மேலும் அதைச் சுற்றியுள்ள
பகுதி பார்வையாளர்களை ரசிக்க இன்னும் பலவற்றை வழங்குகிறது. கதீட்ரல்கள் மற்றும்
தேவாலயங்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இடங்களின் அழகை ரசிப்பவராயின்,
நீங்கள் இறப்பதற்கு முன் பார்க்க விரும்பும் இடங்களின் பட்டியலில்
வக்கீல் மஸ்ஜித் உயர்ந்ததாக இருக்க வேண்டும். உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம்.
இந்த அற்புத அழகை ரசிப்பதற்கு
நீங்கள் ஈரான், ஷீராஸ் வந்துதான்
ஆகவேண்டும். எனவே உங்களது ஈரான் பயணத்தை திட்டமிடும்போது உங்கள் பிரயாண நிரலில்
வாக்கில் மஸ்ஜிதை தரிசிக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்
கொள்ளுங்கள்.
https://messageofwisdom.blogspot.com/2019/12/vakil-mosque.
No comments:
Post a Comment