Islamic Revolution makes world Muslims proud
ஒரு
நூற்றாண்டுக்கும் மேலாக தொங்கிக்கிடந்த உலக முஸ்லிம்களின் தலைகளை நிமிரச்செய்தது
இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களால் வழிநடத்தப்பட்டு, இப்போது இமாம் காமேனேயி அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் இஸ்லாமிய
புரட்சியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 41 ஆண்டுகளைக்
கடந்த நிலையில் எல்லாத் தடைகளையும் தாண்டி வெற்றிப்பாதையில் அது வீறுநடை போட்டுக்
கொண்டிருக்கிறது.
ஈரானின்
சாதனைகள்
இந்த
இஸ்லாமிய புரட்சியினால் சகல துறைகளிலும் ஈரான் இஸ்லாமிய குடியரசு அடைந்துள்ள
வெற்றிகள், படைத்துள்ள சாதனைகள் முழு
இஸ்லாமிய உலகும் நிச்சயமாக பெருமைப்படத்தக்க ஒன்றாகும்.
பாதுகாப்புத்
துறையில் ஈரான் நவீன ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள்,
நீர்மூழ்கிக் கப்பல்களைத் மட்டுமல்லாது அவசியமான அனைத்து ராணுவ
தளபாடங்களையம் தயாரிக்கிறது மட்டுமல்லாமல் செயற்கை கோள்களை விண்ணுக்கு ஏவும்
தொழில்நுட்பத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அணு அறிவியல் திறன் கொண்ட நாடுகளின்
உலகளாவிய கிளப்பில் உறுப்பினராகவும் உள்ளது.
அமெரிக்க
அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல் ஈரான் 40 ஆண்டுகளுக்கும்
மேலாக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும் அமெரிக்க ராணுவ தளங்களையே அழித்தொழிக்கும்
வல்லமையை இஸ்லாமிய குடியரசு பெற்றிருப்பதானது, பிராந்தியத்தில்
அமெரிக்க மேலாண்மையை வலுவிழக்கச் செய்துள்ளது. (காஸெம்
சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்த, ஈரான் கொடுத்த
பதிலடியினால் அமெரிக்க சிப்பாய்களுக்கு தவணை முறையில் பைத்தியம் பிடிக்கிறதாம்).
ஈரான்
கடந்த தசாப்தத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க
வளர்ச்சியை அடைந்துள்ளதோடு பல சாதனைகளையும் புரிந்துள்ளது. குறிப்பாக பொறியியல்
மற்றும் வேதியியலில் துறைகளில், வளர்ச்சியை ஐந்து மடங்காக
உயர்த்தியுள்ளது.
கல்வியில்
அடைந்துள்ள முன்னேற்றம்
இஸ்லாமிய
புரட்சியின் பின் ஈரான் இஸ்லாமிய குடியரசு கல்வியில் அடைந்துள்ள முன்னேற்றம் கண்டு
உலக முஸ்லிம்களுக்கு பெருமையே.
பல்வேறு
துறைகளிலும் உயர் கல்விக்காக ஈரானுக்குள் படையெடுக்கும் வெளிநாட்டு மாணவர்கள்:
ஆப்கானிஸ்தான்,
ஈராக், துருக்கி, ஜப்பான்,
சீனா, சிரியா, மொல்டாவியா,
ஹங்கேரி, உக்ரைன், போலந்து,
சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாக்கிஸ்தான், நெதர்லாந்து,
கொரியா, ஆர்மீனியா, இத்தாலி,
கனடா, பிரான்ஸ், பஹ்ரைன்,
இங்கிலாந்து, அஜர்பைஜான், இந்தோனேஷியா, ரஷ்யா, டென்மார்க்,
செனகல், லெபனான், மெக்ஸிக்கோ,
இந்தியா, ஜெர்மனி, எகிப்து,
தைவான், ருமேனியா, ஸ்லோவாக்கியா,
பாக்கிஸ்தான், குரோஷியா, நைஜீரியா, ஓமான், செர்பியா,
ஸ்லோவேனியா, வியட்நாம், ஜோர்ஜியா, சூடான் மற்றும் இலங்கை நாடுகளை
சேர்ந்தவர்கள்.
ஈரான்
விண்வெளி,
அணு அறிவியல், மருத்துவ மேம்பாடு, அத்துடன் ஸ்டெம் செல் மற்றும் குளோனிங் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு
துறைகளில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மருத்துவத்துறையில்
ஈரான் வியக்கத்தக்க பல சாதனைகளையும் செய்து வருகிறது. பல நாட்டவர்களும்
மருத்துவத்துக்காக இப்போது ஈரானை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல்
ஸ்திரத்தன்மை
பிராந்தியத்தில்
மிகவும் உறுதியான அரசியல் ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு நாடு இருக்குமாயின் நிச்சயமாக
ஈரான் இஸ்லாமிய குடியரசு மட்டுமே என்றால் மிகையாகாது. (அமெரிக்க ராணுவ உதவியின்றி
சவூதி அரசினால் இரண்டு வாரங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்று அமெரிக்க
ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள்).
ஆட்சி
மாற்றம்,
யுத்தம், பொருளாதார பயங்கரவாதம் போன்ற எந்த
அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத தலைமைத்துவமும், அந்த
தலைமைத்துவத்துக்கு கட்டுப்படும் மக்கள் கூட்டமும் இருக்கும்வரை எந்த உலக
சக்தியாலும் இஸ்லாமிய அரசை அசைக்க முடியாது.
பொருதாரத்
தடைகளின் மூலம் ஈரான் இஸ்லாமிய குடியரசை அச்சுறுத்தி அடிபணியைச் செய்யலாம் என்று
அமெரிக்க ஏகாதிபத்தியம் கனவு கண்டுக்கொண்டிருக்கிறது. பாவம் ஒரு சில அரபு
நாடுகளும் தான். நிச்சயமாக அது கனவாகவே முடியும்.
ஈரான்
இஸ்லாமிய குடிரசு தனது உணவுத் தேவையில் மட்டுமல்ல மற்றும் பல தேவைகளில் தன்னிறைவு
கொண்டுள்ள நாடு; மிகையான உற்பத்திகளை
வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது.
ரோபோ
வல்லமை
ரோபோக்களை
உற்பத்தி செய்வதிலும் ஈரான் தனது வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது. உலகில்
வளர்ச்சியடைந்த நாட்டுகள் மட்டுமே கொண்டிருந்த ரோபோ தொழில்நுட்பம் ஈரானிய
மாணவர்கள் கடுமையான ஆராய்ச்சியினூடாக பெற்றுக்கொண்டுள்ளனர். அதி நவீன ரோபோக்களை
உற்பத்தி செய்து தமது திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
சுரேனா
என்பது ஈரானிய மனித உருவ ரோபோக்களின் தொடர் ஆகும், இதற்கு பார்த்தியன் ஜெனரல் சுரேனாவின் பெயரிடப்பட்டது. சுரேனாவின்
செயல்திறனை ஆராய்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்
இன்ஜினியர்ஸ் உலகின் ஐந்து முக்கிய ரோபோக்களில் ஒன்று என்று இதனை
அங்கீகரித்துள்ளது.
செயற்கைக்கோள்
ஒன்றை விண்வெளிக்கு ஏவும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள குறிப்பிட்ட சில நாடுகளில்
ஈரானும் ஒன்றாகும். ஈரான் 2009 இல்
சுற்றுப்பாதை-ஏவுதல் திறன் கொண்ட நாடாக மாறியது. விண்வெளியின் அமைதியான
பயன்பாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 24 நிறுவன
உறுப்பு நாடுகளில் ஈரானும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சகல
துறைகளிலும் ஈரான் அடைந்துள்ள முன்னேற்றத்தை காண்கையில், அது பொருளாத தடைகளுக்கு உட்பட்ட ஒரு நாடு என்பதற்கான எந்த அறிகுறியையும்
அங்கு காண முடியாது.
ஈரான்
இஸ்லாமிய குடியரசுக்கு விஜயம் செய்யும் எவரும் அந்நாடு அடைந்துள்ள முன்னேற்றம்
கண்டு உண்மையிலேயே பிரமித்துப் போவர். ஓர் அபிவிருத்தி அடைந்த நாடு எவ்வாறு
இருக்குமோ, அந்த அங்கலட்சணங்கள் அனைத்தையும்
அங்கு காணக்கூடியதாக இருக்கிறது; இஸ்லாத்துக்கு முரணான
அம்சங்களைத் தவிர.
சவுதி
அரேபியா,
எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளை அமெரிக்க ஆயுதங்களை
வாங்குமாறு கட்டாயப்படுத்தியதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து டிரம்ப்
நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அச்சுறுத்தி பிடுங்கிக்கொள்கிறார். இந்த
பிளாக் மெயிலுக்கு ஈரான் அடிபணியாது.
இஸ்லாமியப்
புரட்சியின் இரண்டாம் கட்டம்
இதே
நேரம்,
இஸ்லாமியப் புரட்சியின் மதிநுட்பம் கொண்ட தலைவரான ஆயதுல்லா அலீ
காமனயீ அவர்கள் 'புரட்சியின் இரண்டாம் கட்டம் குறித்த
அறிக்கை' ஒன்றை கடந்த பிப்ரவரி 11, 2019ம் அன்று
வெளியிட்டிருந்தார். இதனூடாக, இத்தெளிவான பாதையில் தொடர்ந்தும்
பயணிப்பதற்கு கடந்த நான்கு தசாப்தங்களில் அடைந்துகொண்ட மகத்தான சாதனைகள் குறித்து
விளக்கி, இஸ்லாமிய
நாகரிகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அத்தியாவசியமாக அமைகின்ற பரிந்துரைகளை
வழங்கியிருந்தார்.
இந்த
அறிக்கையின் முழுமையான வடிவத்தை இந்த இணைப்பில் காணலாம் https://thoothu2018.blogspot.com/2020/02/blog-post.html
ஒரு
நாட்டில் சரியான தலைமைத்துவம் இருந்தால் எந்த சவாலையும் முறியடித்து, நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லலாம் என்பதற்கு ஈரான் இஸ்லாமிய
குடியரசு நல்லதோர் உதாரணமாகும்.
ஈரான்
இஸ்லாமிய குடியரசு இஸ்லாத்தை ஆட்சிமுறையாக கொண்டிருக்கும் காலம் வரை, எந்த ஒரு சக்தியாலும் அதனை அழிக்க முடியாது; அல்லாஹ்
அதனை பாதுகாப்பான்….. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment