Wednesday, August 28, 2019

பிரிவினைவாதம் என்றால் என்ன, முஸ்லிம்கள் அதை ஏன் நிராகரிக்க வேண்டும்?


What is sectarianism and why should Muslims reject it?

அறிவார்ந்த கருத்து வேறுபாடு மற்றும் விவாதங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், ஆனால் ஒரு பெரிய எதிரி நம்மை தாக்குவதற்கு  காத்திருக்கும்போது ஒருவருக்கொருவர் விரோதப் போக்கு கொள்வது புத்திசாலித்தனமற்றதும் நம் சமூகங்களுக்கு ஒட்டுமொத்தமாக தீங்கு விளைவிக்கும் என்பதும் மறத்தல் ஆகாது.

பல முஸ்லீம் சமூகங்களில் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய ஒரு கருப்பு மற்றும் வெள்ளை ஒற்றைப்பரிமான புரிதலை நம்பும்படி செய்யப்பட்டிருகிறார்கள். வரலாற்று ரீதியாகவும் சமகாலமாகவும் பரவலான (நியாயமான) வேறுபாடுகள் வெளிப்படும் போது அதில் ஒரு பெரிய சிக்கல் ஏற்படுகிறது.

2014 Pew Poll கருத்துக் கணிப்பின்படி, 23% அமெரிக்க முஸ்லிம்கள் பருவ வயதை அடைகையில் இஸ்லாத்தை விட்டு வெளியேருக்கின்றனர். இந்த முஸ்லிம்கள் நம்பிக்கையை இழப்பதில் இஸ்லாத்தைப் பற்றிய ஒரு ஒற்றைப் பரிமாண புரிதல் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது. குறுங்குழுவாதம் பல அமெரிக்க முஸ்லிம் மையங்களில் ஒரு அரிய நிகழ்வு என்று கருதப்பட்டாலும், அவ்வாறான உணர்வுகள் இன்னும் பல முஸ்லிம்களின் இதயங்களில் நீடிக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

முன்னர் குறிப்பிட்டபடி, 40% முஸ்லிம்கள் தாங்கள் தனிக் குழு போக்கு குறுங்குழுவாதத்தை அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளனர், நாட்பது வீதம் என்பது குறைவான எண்ணிக்கையல்ல. மற்ற முஸ்லிம்களின் பால் சகிப்புத்தன்மை அற்ற  தன்மை நம் நேரத்தையும் சக்தியையும் வீணாக்குகிறது. எமது வளங்கள் பிரயோசனமற்றவற்றுக்காக ஒதுக்கப்படுவதை தெளிவாக காணக்கூடியதாக உள்ளது: நமது முஸ்லிம் இளைஞர்களின் நம்பிக்கையில் உள்ள நியாயமான சந்தேகங்களை கருத்துக்களுடன் உரையாற்றுவதற்கு பதிலாக, பலர் குறுங்குழுவாத சொல்லாட்சியைப் பயன்படுத்துவதை நாடுகின்றனர். தனிக் குழு போக்கு ஒரு அறிவுசார் கருத்து வேறுபாடு அல்ல. மாறாக, இது ஓரங்கட்டப்படுதல், அந்நியப்படுதல் மற்றும் மதவெறி மற்றும் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளிலிருக்கும் (முறையான) பிற முஸ்லிம்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையானது பெரும்பான்மை முஸ்லிம்களின் சிந்தனையில் இருந்து வேறுபடும் மற்ற முஸ்லிம்களை அவிசுவாசிகள் (தக்ஃபீர்) என்று அறிவிப்பது வரை இது இருக்கலாம்.

அம்மான் பிரகடனம்: தனிக் குழு போக்கு குறுங்குழுவாதத்தை நிராகரிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளாகும்.

 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய சிந்தனை பள்ளிகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பில் நிறைய உயர்வு தாழ்வுகள் காணப்பட்டன. இவ்விடயத்தில் அம்மான் பிரகடனம் ஒரு சிறந்த முயற்சியாக காணப்படுகிறது. அம்மான் நகரில் ஒன்றுகூடிய அனைத்து முஸ்லிம் நாடுகளினதும் புகழ்பெற்ற அறிஞர்கள் ஒன்றிணைந்து, இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளாக ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றை மிகவும் தெளிவாக வரையறுத்தனர். மூன்று முக்கிய விடயங்களில் அவர்கள் கையெழுத்திட்டு ஒப்புக் கொண்டனர்: முதலாவதாக அவர்கள் 8 மத்ஹபுகளை அங்கீகரித்தனர்: சுன்னி மத்ஹபுகளான (ஹனபி, மாலிகி, ஷாஃபி, ஹன்பலி, மற்றும் ழாஹிரி), ஆகியவற்றோடு ஷியா மத்ஹபுகளான (ஸெய்தி மற்றும் ஜஃபாரி) மற்றும் இபாதி ஆகிய அனைத்து 8 மத்ஹபுகளின் (சட்டப் பள்ளிகளின்) செல்லுபடியை அவர்கள் குறிப்பாக அங்கீகரித்தனர்.) மேலும் அவர்கள் அஷ்அரியிசம், சூஃபிசம் மற்றும் உண்மையான ஸலபி சிந்தனையையும் அங்கீகரித்தனர்; மேலும் ஒரு முஸ்லிம் என்பதற்கான துல்லியமான வரையறைக்கு வந்தனர். இரண்டாவதாக, முஸ்லிம்கள் என்ற  வரையறையின் அடிப்படையில், அவர்கள் முஸ்லிம்களுக்கு  இடையில் தக்ஃபீரை (விசுவாசதுரோக அறிவிப்புகளை) தடை செய்தனர். மூன்றாவதாக, மாதாஹிப்பின் அடிப்படையில், அவர்கள் ஃபத்வாக்களை வழங்குவதற்கான அகநிலை மற்றும் புறநிலை முன் நிபந்தனைகளை வகுத்தனர், இதன் மூலம் இஸ்லாத்தின் பெயரால் உள்ள அறியாமையையும் தான்தோன்றித்தனமான மற்றும் சட்டவிரோத மார்க்கத்தீர்ப்பு வழங்கும் குழுக்களையும் அம்பலப்படுத்தினர்.

அம்மான் பிரகடனம் ஒரு நேர்மறையான வளர்ச்சியாகும், இது முஸ்லிம்களிடையே உள்ள உண்மையான வேறுபாடுகள் என்ன என்பதை துல்லியமாக முன்வைத்தது. சுன்னிகள், ஷியா மற்றும் இபாதிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்ற பிரகடனத்துடன் இன்னுமுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அல்-அஸ்ஹரின்  ஃபத்வா மற்றும் அல்-சிஸ்தானியின் "சுன்னிகள் (இஸ்லாத்தில்) எங்கள் சகோதரர்கள் மட்டுமல்ல, நாமே தான் அவர்கள்என்று  புகழ்பெற்ற அறிவிப்பும் அடங்கும். சகிப்புத்தன்மையையும் பன்மைத்துவத்தையும் ஊக்குவிக்கும் இந்த முயற்சிகள் பாரம்பரிய இஸ்லாமிய அறிஞர்களின் இதயத்திலிருந்து வந்தனவாகும்; அவை கடைபிடிக்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் பிரிவினைவாதம்

சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான முயற்சிகள் நமது வரலாற்றை நினைவூட்டுகின்றன, ஏனெனில் முஸ்லிம்கள், பெரும்பாலும், சிந்தனை பிரிவுகளுக்கு (மத்ஹபுகளுக்கு) இடையிலான சகிப்புத்தன்மை இருந்துவந்ததே இஸ்லாமிய வரலாறு. ஷெரீப்பின் கீழ் மக்காவிலும்  மதீனாவிலும் பல்வேறு சிந்தனை பிரிவு பின்னணியில் இருந்து வரும் முஸ்லிம்கள் தங்களது சிந்தை பிரிவுக்கேற்ப சுதந்திரமாக தமது கடமைகளை நிறைவேற்ற  அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஷெரீபின் குடும்பமே சுன்னிகளையும்  மற்றும் ஷியாக்களையும் கொண்டிருந்தது. ஷாஃபி மத்ஹபை பின்பற்றும் சுன்னிகளும் ஸெய்தி மத்ஹபை பின்பற்றும் ஷீஆக்களும் நிம்மதியுடனும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையாக வாழ்வதற்கு யெமன் தேசம் மற்றொரு எடுத்துக்காட்டு. யெமன் தனித்துவமானது, அது ஒருபோதும் சுன்னி மசூதி அல்லது ஷியா மசூதி என்ற கருத்தை உருவாக்கவில்லை.

தொழுகையில் கையை எங்கு கட்டுகின்றனர் என்பதைக் கொண்டு மட்டுமே ஒரு முஸ்லிம் ஷாஃபியா அல்லது ஸெய்தியா என்று சொல்ல முடியும். சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமல்ல ஷாஃபி, ஸெய்தி அறிஞர்கள் மத்தியிலும் கூட, மத்ஹபுக்கிடையிலான திருமணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட உண்மை: பிரபல யேமன் ஷாஃபி சிந்தனை பள்ளியின் அறிஞர் அல்-ஹபீப் அலி அல்-ஜிஃப்ரி மேற்கண்ட நிகழ்வை விளக்கி ஒரு உரையை நிகழ்த்தியுள்ளார். அதில் அவர்  யெமனில் உள்நாட்டுப் போர் உண்மையில், முற்றிலும் அரசியல் பின்னணியைக்கொண்டதும் வெளியில் இருந்து உட்புகுத்தப்பட்ட பிரிவினைவாதமும் ஆகும் என்பதை எடுத்துக்காட்டி, இது யெமனின்  கலாச்சாரத்திற்கு அந்நியமானது என்றும் குறிப்பிடுகின்றார். 

பிரிவினைவாதத்தால் ஏற்படும் விளைவு படு பயங்கரமானது. இப்னு ஹதீதின் ஷஹ்ர் நஜ்ஜுல் பாலகாவில் பின்வரும் சம்பவம் ஒன்று பதியப்பட்டுள்ளது: ஷாஃபி மத்ஹபை பின்பற்றுவோருக்கும் ஹனாஃபி மத்ஹபை பின்பற்றுவோருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டை பற்றியதே அது: 633 AH இல் இஸ்ஃபாஹான் மக்கள் இரண்டு குழுக்களாக இருந்தனர்; ஹனஃபி மத்ஹபை சேர்த்தோர் மற்றும் ஷாஃபி மத்ஹபை சேர்த்தோர். அவர்கள் நிரந்தர போர்களில் ஈடுபட்டனர் மற்றும் (ஒருவருக்கொருவர் எதிராக) வெளிப்படையான மதவெறியைக் காட்டினர். எனவே, ஹனபிகளை ஒழிக்கும் முயற்சியில் ஷாபிகளில் ஒரு குழு, தாத்தாரியர்களின் உதவியை நாடினர். இதையடுத்து ஹனஃபிகளை அழிக்க ஊருக்குள் நுழைந்து தாத்தாரிய போர்வீரர்கள் முதலில் ஷாஃபி மத்ஹபை சேர்ந்தோரை கொண்றுகுவித்து அவர்களது பெண்களையும் அடிமைப்படுத்தினர். பிறகு ஹனஃபிகளையும் அவ்வாறே செய்தனர்.

பிரிவினை கலாச்சாரத்தை வளர்க்கும் குறுங்குழுவாதத்தின் துரதிர்ஷ்டவசமான விளைவவே இதுவாகும். சுன்னிகளாக இருந்தபோதும் கூட, இந்த பிரிவினை ஒரு சுன்னி குழுவை அழிக்க இன்னொரு சுன்னி குழு முற்படுவதற்கு வழிவகுத்தது. குறுங்குழுவாத மனநிலை வெவ்வேறு பிரிவுகளை ஓரங்கட்டுவதுடன் நிற்கப்போவதில்லை; உறவினர் என்ற மனநிலையை ஒழித்தவுடன் ஒரு மனிதன் தனது சகோதரனுக்கு எதிராக பிரிவினையை வளர்க்கவும் குழிபறிக்கவும் இது வழிசமைக்கிறது என்பதை புரிந்துவுகொள்வது அவசியமாகும்.

பிரிவினைவாதத்தை தீர்க்கும் தற்கால எடுத்துக்காட்டுகள்

இன்று, ஒரு சில முஸ்லீம் அரசாங்கங்களும் மக்களும் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் பணியாற்றுவதை காணக்கூடியதாக உள்ளது. பிரிவினைவாதத்தை குறைப்பதில் ஓர் உதாரணம் ஓமான். பல மத்ஹபுகளை பின்பற்றுவோர் சமாதானமாக வாழும் நாடு ஓமான். நாட்டின் ஏறத்தாழ பாதி மக்கள் இபாதி பிரிவை சேர்ந்தவர்கள், மற்ற பாதி சுன்னி மற்றும் ஷிஆ பிரிவுகளை சேர்ந்தோராகும். இவர்களுக்கிடையில் பிரிவினைவாத பிரச்சினை எழுவது கிடையாது; பிரிவினைவாத வெளிப்பாடுகளுக்கு எதிரான கடுமையான அரசாங்க சட்டங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.

அரசாங்கத்தின் தலையீடு உதவியாக இருந்தபோதும், சமூக முயற்சிகள் விரும்பத்தக்கவை; இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களின் போது, பாகிஸ்தான் சுன்னிகள் தங்கள் ஷியா சகோதரர்களைப் பாதுகாக்க ஒரு முயற்சியை மேற்கொண்டனர். இது ஒர் எடுத்துக்காட்டு மட்டுமே. இதுபோன்று பல சமூக முயற்சிகள் பல நாடுகளிலும் உள்ளன. இந்த முயற்சிகள் வெவ்வேறு இஸ்லாமிய மரபுகளைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரர்கள் மீதான உண்மையான அக்கறை மற்றும் அன்பிலிருந்து உருவாகின்றன, மேலும் இவை ஒரு வலுவான, ஒன்றுபட்ட முஸ்லீம் சமூகத்திற்காக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய உணர்வுகளாகும்.

மறுபுறம், கடந்த நூற்றாண்டு (குறிப்பாக கடந்த சில தசாப்தங்கள்) ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் மற்றும் சமூகத்தை அடக்கியாள்வதற்காகவும் பிரிவினைவாதத்தைக் கையாண்டு   பல அரசியல் மோதல்கள் உருவாக்கப்பட்டதை நாம் கண்கூடாகக் கண்டோம். வரலாறு முழுவதிலும் உள்ள கொடுங்கோலர்கள் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கும் மதத்தின் பெயரில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை அடைப்பதற்கும் "மதத்தின்" நியாயப்படுத்தலை நாடுகின்றனர். அநியாய அரசியல் சக்திகளுடன் இணைந்த அறிஞர்கள்உமையா காலத்தை போலவே இன்றும் செயல்படுகின்றனர்.

அதே அறிஞர்கள் மத சுலோகங்களை பயன்படுத்தி ஈமான்கொண்ட சகோதரர்களை ஒருவருக்கொருவர் சண்டையிட அணிதிரட்டுகிறார்கள்; இவர்களது இந்த சதியினால், தனிநபர்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், இறுதியில் அவர்கள் மதத்தையே  அழிக்கின்றார்கள். தத்தமது அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் எண்ணத்தில்  மதத்தைப் பயன்படுத்தியதன் காரணமாக, மதத்தலங்கள் இன்று மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றன. மற்ற முஸ்லிம்களை அரக்கர்களாக காட்டும் முயற்சிக்கு மதத்தைப் பயன்படுத்துவதை நாம் அங்கீகரிக்கக் கூடாது. இவ்வாறு செய்வோமானால் நாம் இனி எந்தவொரு கொடுங்கோலரால் ஏமாற்றப்பட மாட்டோம்; சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றிற்கான அழைப்புகளுக்கு நாங்கள் அதிக வரவேற்பைப் வழங்குவோம்.

எமது தற்போதைய நிலை பரிதாபகரமானது. இப்போது எம்மத்தியில் உள்ள பிரிவினைவாத சிந்தனை  எதிர்காலத்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சியையும் அழித்துவிடும்.

இங்கிருந்து நாம் எங்கு செல்வது...?

பிரிவினைவாத மனப்பான்மை முஸ்லிம்களை சிறிய மற்றும் பலவீனமான குழுக்களாக தொடர்ந்து பிரிப்பதை நிரூபித்துள்ளது. முஸ்லிம்களை சுன்னி மற்றும் ஷியா குழுக்களாகப் பிரிப்பதுடன் இது நின்றுவிடும் என்று நாம் நினைக்கலாம், ஆனால் அது நிற்கப்போவதில்லை. சுன்னிகளை சூஃபிகள் என்றும் ஸலபிகள் எனப் பிரிப்பார்கள், அவர்களுக்குள்ளும் பல பிரிவுகளை ஏற்படுத்துவார்கள். பிரிவினைவாத மனப்பான்மை கவனிக்கப்படாவிட்டால், முஸ்லிம்கள் தங்கள் ஷேக்கைப் பின்பற்றாத முஸ்லிம்களுடன் அவர்களது  சொந்த சிந்தனை பள்ளியிலிருந்து கொண்டே சண்டையிடுவார்கள். வரலாற்று ரீதியாக, சிந்தனை மற்றும் பிரிவின் ஒவ்வொரு பள்ளியிலும் தவறுகள் இருக்கலாம். பிரச்சினையை ஏற்படுத்துவது என்னவென்றால், எக்ஸ் எனும் மத்ஹபில் இருப்போர் ய மத்ஹபில் இருப்போர் தொடர்பாக எதிர்மறையான படத்தை முன்வைத்து தவறு கண்டுபிடிப்பதில் ஈடுபடுவதுவே ஆகும்.

முன்னோக்கி செல்லும் பாதை சகிப்புத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தின் பாதையாக இருக்க வேண்டும். நமது முஸ்லீம் அமைப்புகளை, பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸ்களை, மற்றும் புத்திஜீவிகளைக்கொண்ட அதுபோன்ற அமைப்புகளை முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் கருப்பொருள்கள் மற்றும் மதிப்புகளை மையமாகக் கொண்ட நிகழ்வுகளை நடத்த ஊக்குவிப்பதன் மூலம் நாம் இதனை ஆரம்பிக்கலாம். வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் கதீபுமார்களுக்கு இதில் பெரும் பங்கு வகிக்கலாம். றஸூலுல்லாஹ்வின் பிறந்த தினத்தை இதற்காக பயன்படுத்தலாம். மேலும் இஸ்லாத்தில் அன்பு மற்றும் நீதியின் முக்கியத்துவம், சமூக சகவாழ்வு போன்றவற்றுடன் உய்குர், காஷ்மீரி, பாலஸ்தீனிய மற்றும் பிற ஒடுக்கப்பட்ட முஸ்லீம் சகோதர சகோதரிகளின் நிலை பற்றி கலந்துரையாடலாம், மக்களை தெளிவுபடுத்தும் கூட்டங்களை இணைந்து ஏற்பாடு செய்யலாம்.

இறுதியாக, முஸ்லிம் கல்விமான்கள் ஒருவருக்கொருவர் தம்மிடையே சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை வளர்ப்பது முக்கியம். அதைச் செய்வதற்கான ஒரு வழி, பிற சிந்தனைப் பள்ளிகளின் உறுப்பினர்களுடன் ஆக்கபூர்வமான கருத்துக் பரிமாறல்களில் ஈடுபடுவது நன்மை பயக்கும்.

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். பலர் மார்க்கத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள், மற்றவர்கள் இஸ்லாமோபோபியாவினால் எல்லா பக்கங்களில் இருந்து தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். சன்னியிசத்துக்காகவோ ஷியா இசத்துக்காகவோ, சூஃபியிசத்துக்காகவோ அல்லது ஸலபிசத்துக்காகவோ நம் சமூகத்தில் உராய்வையும் வெறுப்பையும் உருவாக்க இது சரியான நேரம் அல்ல. 

அறிவார்ந்த கருத்து வேறுபாடு மற்றும் விவாதங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், ஆனால் ஒரு பெரிய எதிரி நம்மை காயப்படுத்த காத்திருக்கும்போது ஒருவருக்கொருவர் விரோதப் போக்கு கொள்வது என்பது நம் சமூகங்களுக்கு ஒட்டுமொத்தமாக தீங்கு விளைவிக்கும், ஆபத்தை ஏற்படுத்தும்.


கருத்துக்களால் மோதலாம், மோதவும் வேண்டும், ஆனால் இதயங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அல்லாஹ் குர்ஆனில் நமக்கு நினைவூட்டுகிறான்: இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்……… (3:103).

நாம் உண்மையிலேயே விசுவாசத்தில் சகோதரர்களாக இருப்போம், எங்கள் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.

யஹ்யா அல்-ஷாமி
Yahya Al-Shamy



1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் நான் சுன்னத் ஜமாத் குடும்பதை சார்நதவன் நான் எங்களின் காெள்கை பற்றிதெ ரிந்து காெ ள்ளவேண்டும் உதவுங்கள் அல்லாஹ்விற்காக 9940360615

    ReplyDelete