Monday, July 22, 2019

ஈரான் தொடர்பான உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள் - உலக சக்திகளுக்கு ஈரானின் தெளிவான செய்தி

Change your course viz-a-viz Iran – Iran’s clear message to W.Powers


ஐந்து வல்லரசு நாடுகளும் ஜெர்மனியும் இணைந்து ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் செய்து கொண்ட JCPOA ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி தன்னிச்சையாக வெளியேறி, இஸ்லாமிய ஈரானை அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என்ற எண்ணத்தில், கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து மத்தியகிழக்கு பிரதேசத்தில், குறிப்பாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் பதற்ற நிலை நீடித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

அது மட்டுமல்லாமல் விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்புகிறோம், அடிப்போம், அழிப்போம் என்றெல்லாம் அமெரிக்கா பயமுறுத்தி பார்த்தது. இவை எதற்குமே ஈரான் அஞ்சவில்லை. எத்தகைய அத்துமீறல்களுக்கும் பதிலடி கொடுப்போம் என்பதற்கு அறிகுறியாக ஈரான் அமெரிக்க புலனாய்வு ட்ரோன் விமானமொன்றை சுட்டு வீழ்த்தியது.
நிலைமை இவ்வாறு இருக்கையிலேயே ஜூலை 4ம் திகதி பிரிட்டன், ஜிப்ரால்டாவுக்கு அருகாமையில் சர்வதேச கடலில் சென்று கொண்டிருந்த Grace 1 என்ற ஈரானிய எண்ணைதாங்கி கப்பலை, அமெரிக்காவின் தூண்டுதலுக்கு இணங்க, சட்டவிரோதமாக கைப்பற்றியது. இது ஈரானை வேண்டுமென்றே வம்புக்கிழுக்கும் செயலாகும்.

ஈரானுக்கு சொந்தமான இக்கப்பலை விடுவிக்க ஈரான் எல்லா ராஜதந்திர நடவடிக்கையையும் எடுத்தது; முடியுமான அத்தனை கோரிக்கைகளையும் விடுத்தது. இவை எதற்கும் பிரிட்டன் செவிசாய்க்காத நிலையில் ஈரான் அதற்கு கடும் எச்சரிக்கையை விடுத்தது, நிச்சயமாக பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியாக கூறியது.

அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று பிரிட்டிஷ் கடற்படையினர்  
ஜிப்ரால்டாவுக்கு அருகாமையில் சர்வதேச கடலில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு ஈரானிய எண்ணெய் எண்ணெய் கப்பலை கைப்பற்றியதை கேள்விப்பட்டபோது, போல்டன், அவரது அளவுகடந்த மகிழ்ச்சியை "சிறந்த செய்தி: ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை மீறி சிரியாவிற்கு ஈரானிய எண்ணெயுடன் சென்ற கிரேஸ் 1 என்ற சூப்பர் டேங்கரை இங்கிலாந்து தடுத்து வைத்துள்ளது" என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.


இங்கிலாந்தில் பிரெக்ஸிட் என்றும், பிரதமர் ராஜினாமா என்றும், புதிய பிரதமர் தெரிவுக்கான ஓட்டம் என்றும் ஒரு அரசியல் நிச்சயமற்ற தன்மை இருந்து கொண்டிருக்கும் நிலையில் அது அமெரிக்க சதிவலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒழுங்கற்ற முறையில் வெளியேறும் விளிம்பில் உள்ளது, அதன் நெருங்கிய ஐரோப்பிய பங்காளிகளை அந்நியப்படுத்தியும் இருக்கிறது. அதே சமயம் டிரம்ப்பின் அமெரிக்காவுடனான அதன் உறவு கணிசமான அளவு சிதைந்தும் உள்ளது. இதன் விளைவாக, பிரிட்டன், அதைச் சமாளிக்க முடியாத தருணத்தில், ஒரு சர்வதேச நெருக்கடியின் நடுவில் இழுத்து விடப்பட்டுள்ளது.

ஜிப்ரால்டர் விவகாரத்தின் விளைவுகள் இப்போது தெளிவாகி வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தியில் ஸ்டெனா இம்பீரோ (Stena Impero) என்ற பிரிட்டிஷ் கப்பலை ஈரானின் புரட்சிகர காவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றினர். பிரிட்டனின் ஜிப்ரால்டர் "கடற்கொள்ளை"க்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் முன்னர் உறுதியளித்திருந்தது. இது அந்த சம்பவத்துடன் ஒரு வெளிப்படையான தொடர்பை கொண்டிருக்கவில்லை என்றாலும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கை என்பதாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலை தவிர்க்கப்பட்டிருக்கலாம். இன்றைய நெருக்கடிக்கு தூண்டுதலான ஈரானுடனான 2015 - JCPOA அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான டிரம்ப்பின் முடிவை பிரிட்டன் எதிர்த்தும் இருந்தது. பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் தடை ஆகியவற்றை உள்ளடக்கிய "அதிகபட்ச அழுத்தம்" என்ற டிரம்ப்-போல்டன் கொள்கை, மிகவும் மிதமான ஈரானியர்களை கூட தீவிரமயமாக்கியுள்ளதால் பிரிட்டன் இவ்விடயத்தை மிகவும் எச்சரிக்கையுடனேயே அவதானித்துக் கொண்டிருந்தது.

JCPOA அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய முயற்சிகளை பிரிட்டன் ஆதரித்தபோதும், தெரேசா மே மற்றும் வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் இரு வழிகளையும் கொண்டிருக்க முயன்றனர் - டிரம்பின் காதலையும் விரும்பினார்.

ஈரானின் பிராந்திய நடவடிக்கைகள் மற்றும் ஏவுகணைத் திட்டம் பற்றிய வாஷிங்டனின் குற்றச்சாட்டுக்களை அவர்கள் பகிரங்கமாக ஆதரித்தனர், மேலும் ஈரானை, ஒப்புக்கொண்ட அணுசக்தி தடைகளைத் தவிர்த்தபோது, அதை கண்டித்தனர்.

ஆக, அவர்கள் ஒரே நேரத்தில் அமெரிக்காவையும் ஈரானையும் திருப்த்திப்படுத்தும் முயற்சில் ஈடுபட்டனர் எனலாம்.

பிரித்தானிய கப்பலை தடுத்து வைத்துள்ள ஈரான் அதனை விடுவிக்க வேண்டும் என்று பிரிட்டனுடன் இணைந்து அமெரிக்காவும் பிரான்சும் கோரிக்கை விடுத்துள்ளன. இதன்மூலம் ஈரானிய எண்ணெய் கப்பல் தடுத்து வைக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய இவர்களது இரட்டை நிலைப்பாட்டை அவர்களாகவே உலகுக்கு தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர். ஈரான் இஸ்லாமிய குடியரசும் அநியாயத்துக்கு அடிபணிய மாட்டோம் என்ற தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாய் உள்ளது.

தமது வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? என்ற அச்சம் பலர் மனதிலும் தோன்றியிருக்கும். ஆனால் நல்லவேளை  அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. ஒரு யுத்தம் ஏற்படுவதை அமரிக்காவும் விரும்பவில்லை, ஈரானும் விரும்பவில்லை என்பது எல்லோருக்கும் நிம்மதி அளிக்கும் விடயமாகும்.

ஆனாலும் யுத்தம் ஒன்று ஏற்பட்டு, ஈரான் அழிவை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சவூதி அரேபியாவுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்தது எனலாம்.

மேலும் அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவமானது, பிராந்தியத்தியத்தில் உள்ள ஏனைய அரபு நாடுகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை வழங்கியது. தமது நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின், நிச்சயமாக ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தும்; அதனால் தமது நாடு பாரிய விளைவுகளை சந்திக்க நேரும் என்று உணர்ந்த ஐக்கிய அரபு ராஜ்ஜியம் சவுதி தலைமையிலான ராணுவ கூட்டணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது மட்டுமல்லாமல், தெஹ்ரானுக்கு தமது தூதுக்குழுவையும் அனுப்பி வைத்தது. இது சவுதிக்கு மற்றுமொரு பேரிடியாக அமைந்தது.

சவுதியின் சுய விருப்பு வெறுப்புக்காக தமது நாட்டு நலன்களை பணயம் வைக்க அமெரிக்காவும் தயாரில்லை, சூழவுள்ள அரபு நாடுகளும் தயாரில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இதனை சரியாக புரிந்து கொண்டு சவுதி அரேபியா தன்னிலையை மாற்றி, பிராந்திய நாடுகளுடன் நல்லுறவைப் பேணுதல் சகலருக்கும் நன்மை பயக்கும். இதுவே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.



No comments:

Post a Comment