Saturday, June 1, 2019

"அமெரிக்க இஸ்ரேலிய சதித்திட்டம் வெற்றிபெற ஈரான் ஒருபோதும் இடமளிக்காது"


Rouhani warns of the 'Deal of the Century' in a letter to heads of Islamic states 

எம் மத்தியில் சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்வோம், ஒருவருக்கொருவர் ஒத்தாசை புரிபவர்களாக இருப்போம். ஈரான் இஸ்லாமிய குடிரசு பற்றி எந்த அச்சமும் கொள்ளவேண்டிய அவசியமில்லை, எமக்குள் நாம் மோதல் தவிர்ப்பு, ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்வோம். எம்மை சுற்றி இஸ்லாத்தின் எதிகளால் சதிவலை விரிக்கப்பட்டுள்ளது; அதில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாக்கும் ஒரே வழி எமது சகோதரத்துவமே என்று சில நாட்களுக்கு முன் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை நோக்கி ஈரான் நேசக்கரம் நீட்டியதை நாம் அறிவோம்.

இதனை தொடர்ந்து ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் 'நூற்றாண்டின் ஒப்பந்தம்' என்ற பெயரில் அமெரிக்க ஜனாதி ட்ரம்பினால் திணிக்கப்படவுள்ள சதித்திட்டம் பற்றி எச்சரித்துள்ளார்.

சர்வதேச குத்ஸ் தினத்தன்று இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கான கடிதத்தில் ஜனாதிபதி ஹசன் ருஹானி, 'நூற்றாண்டின் ஒப்பந்தம்' (Deal of the Century) என்ற ஒப்பந்தத்தை பாலஸ்தீனிய உரிமை போராட்டத்தை அழித்து, பலஸ்தீனை முழுமையாக ஆக்கிரமிக்கவும் மேலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பதற்குமான ஒரு பெரும் சதி என்று விவரித்துள்ளார்.

சர்வதேச குத்ஸ் தினத்தின் 40வது ஆண்டை முன்னிட்டு, ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருஹானி, முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கு எழுதிய இக்கடிதத்தில்,  "நூற்றாண்டிற்கான உடன்படிக்கை" என்ற பெயரில் அமெரிக்காவும் இஸ்ரரேலும் இணைந்து விரித்துள்ள சதிவலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள் என்று எச்சரித்துள்ளார். திட்டத்தின் அபாயகரமான பிராந்திய அம்சங்களை விளக்கி, இதனை முறியடிக்க வேண்டிய அவசியம் பற்றியும் பாலஸ்தீனத்தை மீட்கும் இஸ்லாமிய கடமை பற்றியும் வலியுறுத்தியுள்ளார்.

"பொது எதிரிக்கு முகம்கொடுக்கும் வகையில் முஸ்லிம் உலகின் அதிகபட்ச ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படும் நேரத்தில், முஸ்லிம் உலகின் பிரதான பிரச்சினையாக பாலஸ்தீனிய பிரச்சினை இருக்கையில், துரதிஷ்டவசமாக, எமது கவனத்தை திசை திருப்பி, பிரிவினை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை காண்கிறோம்

பாலஸ்தீன மக்களை அழிக்கவும் அனைத்து முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கவும் கொண்டுவரப்படவுள்ள 'நூற்றாண்டின் ஒப்பந்தம்' என அழைக்கப்படும் வெளிப்படையான சதித்திட்டம் தொடர்பாக முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் பாராமுகமாக இருப்பதையிட்டும் ரூஹானி தனது கவலையை தெரிவித்துள்ளார்.

"இந்தத் திட்டம் அபாயகரமான பிராந்திய அம்சங்களைக் கொண்டுள்ளது; மற்றும் பாலஸ்தீனிய மக்களின் முழு உரிமையை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். பலஸ்தீனின் உண்மையான உரிமையாளர்கள்,  அவர்களது சொந்த நிலத்தில், சுதந்திர அரசொன்றை அமைத்து, கிழக்கு ஜெரூசலத்தை அதன் தலைநகராக ஆக்கிக்கொள்ளும் உரிமையை இல்லாதொழிக்கப் பார்க்கின்றனர்" என்றும் ரூஹானி குறிகுறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்து, டெல் அவிவிலிருந்து புனித நகரத்திற்கு வாஷிங்டனின் தூதரகத்தை இடம் மாற்றியதையும், சிரியாவின் கோலான் பிரதேசத்தை இஸ்ரேலிய இறையாண்மைக்கு உற்பட்டதாக அறிவித்து, வாஷிங்டனின் "வெளிப்படையான விரோதத்தை" காட்டியதானது பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமல்ல முழு முஸ்லிம் உலகிற்கும் எதிரான செயலாகும். இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கைகளையும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் அனைத்து முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான ஒரு ஆபத்தான போக்கின் தொடக்கத்தை அறிவிப்பது மட்டுமல்லாமல் அவற்றின் அனைத்து தீர்மானங்களையும் முடிவுகளையும் அப்பட்டமாக மீறும் செயலாகும், என்று ருஹானி சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் நாடுகள் தங்களுக்கிடையில் உள்ள பிணக்குகளை முடித்து, "நூற்றாண்டின் ஆபத்தான சதித்திட்டத்தை" எதிர்க்கவும், பாலஸ்தீனத்தை பாதுகாக்கவும் மக்கா உச்சிமாநாட்டை  பயன்படுத்த வேண்டும் என்று அவர் இஸ்லாய நாட்டு தலைவர்களை வேண்டிக்கொண்டார்.

"முஸ்லிம் உலகத்திற்கு எதிரான பாரிய அச்சுறுத்தலை" எதிர்ப்பதற்கு ஈரான் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்த ரூஹானி, நூற்றாண்டின் ஆபத்தான சதித்திட்டத்தில் இருந்து பாலஸ்தீனத்தை பாதுகாக்க, மக்கா உச்சி மாநாட்டை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து OIC உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொண்டார்.

மேலும், குத்ஸ் தினத்தை நினைவுகூறுவதற்காக தெஹ்ரானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்கள் பேரணிகளில் கலந்துகொள்கையில், "அமெரிக்க இஸ்ரேலிய சதித்திட்டம் வெற்றிபெற ஈரான் ஒருபோதும் இடமளிக்காது" என்று ருஹானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


No comments:

Post a Comment