“We do consider you as a
brother… We do consider the people of Makkah and Madinah our brothers.”
- Rouhani
றஸூலுல்லாஹ்வின் மீலாத் தினத்தை முன்னிட்டு
ஈரான் இஸ்லாமிய குடியரசு தலைநகர் தெஹ்ரானில் 32 வது மூன்று நாள் சர்வதேச ஒற்றுமை மாநாடு நவம்பர் 24 ம் தேதி ஆரம்பித்தது.
600க்கும் அதிகமான இஸ்லாமிய அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டின் துவக்க
வைபவத்தில் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி
ஹசன் ரூஹானி உரையாற்றினார்.
அவரது உரையில், சியோனிச புற்றுக்கட்டியை வன்மையாக கண்டித்ததுடன் சவுதி அரேபியாவை "இலவசமாக" காப்பாற்றுவதற்கு நாம் தயார்
என்றும் தெரிவித்தார்.
நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சர்வதேச மாநாடு, பலஸ்தீன்
விடுதலையினை ஆராய்வதற்கென "அல்
குத்ஸ், இஸ்லாமிய ஒற்றுமையின் அச்சு" என்ற
தொனிப்பொருளில் இடம்பெற்றது. இதில் ஏராளமான பலஸ்தீன் போராளிகளும் கலந்துகொண்டனர்.
சவுதியை விழித்து கூறுகையில் ரூஹானி "உங்களது பாதுகாப்புக்காக நீங்கள்
அமெரிக்காவுக்கு 450 பில்லியன்
டொலரை வழங்கியபோதும், உங்கள் பாதுகாவலர் (டிரம்ப்) உங்களை பகிரங்கமாக இழிவுபடுத்துகிறார். கடந்த
செப்டம்பர் 27 அன்று ஒரு
பிரச்சார கூட்டத்தில் டிரம்ப், "அமெரிக்க பாதுகாப்பு இல்லாமல், சவுதி அரேபியா இரண்டு வாரங்களுக்கு கூட
நீடிக்காது." என்று கூறினார்.
“அமேரிக்கா பிராந்திய முஸ்லிம் நாடுகளுடன்
நெருக்கமான உறவுகளை வளர்த்துள்ளது இஸ்ரேலை பாதுகாப்பதற்காகவே அன்றி வேறில்லை. இதனை
இந்த முஸ்லீம் நாடுகள் உணர மறுக்கின்றன. அமேரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிவது
"துரோகம்" என்றும் இன்னுமின்னும் தலைகுனிவையே ஏற்படுத்தும்” என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்க உளறுவாய் ஜனாதிபதி செப்டம்பர் 27 ம் தேதி பேசிய உரையில், “தான் சவூதி மன்னருடன் பேசியபோது ‘உங்களிடம் தாராளமாக பணம் இருக்கிறது. மன்னரே, நீங்கள் அப்பணத்தில் எமக்கும் கொஞ்சம் தரவேண்டும். உங்களது பாதுகாப்புக்காக அதனைத்
தந்தேயாகவேண்டும். எமக்கு இரண்டு ட்ரில்லியன் ($2 trillion) டொலர்கள் தேவை" என்று கூறியதாக
குறிப்பிட்டார்.
'எட்டி
உதந்தவன் காலை முத்தமிடுவது' போன்று இத்தகைய
பகிரங்க அவமானத்தை சவூதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான்
"நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் சாதாரணம்" என்று கூறினார்.
ஆனால் இது ஒரு கருத்து வேறுபாடு அல்ல; இது அப்பட்டமான அவமானமாகும் என்பதை அவரால் உணர முடியவில்லை.
இதனை புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்வதானது, மானம், ரோஷம் அற்ற அடிமை ஒருவனால் மட்டுமே முடியும்.
பின் சல்மானுக்கும் அவரை
சுற்றியுள்ளோருக்கும் இஸ்லாமிய ஈரானே "பெரிய
எதிரி"யாகத் தெரிகிறது. அவர்கள் இஸ்ரேலியர்கள் தங்கள் மச்சான்மார்கள் (Our cousins) என்று
பகிரங்கமாகவே கூறியுள்ளனர்...!
"மேற்குலகினதும் அரபிகளினதும் தூடுத்தலில் சத்தாமினால்
திணிக்கப்பட்ட யுத்தத்தை, எட்டு ஆண்டுகளாக தன்னந்தனியாக நின்று முகம்கொடுத்தோம், நமது நாட்டை பாதுகாத்தோம். அதுபோல் எம்மால்
சவூதி அரேபியாவையும் பாதுகாக்க முடியும்" என்றும் ரூஹானி கூறினார்.
“சதாமுக்கு பின்னரான ஈராக்குக்கு தாயேஷின்
பயங்கரவாதத்தை எதிர்த்து போராட உதவினோம், சிரியா தன்னை
பாதுகாத்துக்கொள்ளவும் உதவினோம். அதுபோல், இஸ்ரேலின்
அத்துமீறல்களுக்கு எதிராக லெபனானில் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் பலஸ்தீன்
போராளிகளுக்கும் உதவிக்கொண்டிருக்கிறோம்” என்றும் ரூஹானி குறிப்பிட்டார்
ரூஹானி தொடர்ந்து உரையாற்றுகையில் சவூதி அரேபியாவை நோக்கி "நாம் உங்களை பயங்கரவாதத்தில் இருந்து மட்டுமன்றி வல்லரசுகளிடமிருந்தும் பாதுகாப்போம். நாம் சவுதி மக்களை எமது சகோதரர்களாவே கருதுகிறோம். மக்கா மற்றும் மதீனா வாசிகள் எமது உடன்பிறப்புகளாகும்,” என்றார்.
ஹாமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில்
ஹானியேவுக்கு இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இருந்தபோதும், இலத்திரனியல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, வீடியோ மூலம் மாநாட்டில் உரையாற்றினார்.
இவ்வருட மாநாடு பலஸ்தீன விடுதலையை மையமாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்டதை
பாராட்டியும் ஈரான் இஸ்லாமிய குடிரசு தளராமல் அர்ப்பணிப்புடன், தொடர்ச்சியாக செய்துவரும் உதவிக்கு நன்றியும்
தெரிவித்தார்.
ஆனால் இந்த நாடோடி அரபிகளின் பிடிவாதம்
(அல்லது முட்டாள்தனம்) எமது நல்லெண்ணத்தை புரிந்துகொள்ள விடாது. அவர்கள் $ 450 பில்லியன் பாதுகாப்பு பணத்தை அமெரிக்காவுக்கு
செலுத்தி, அவமானப்பட தயாராய் உள்ளனர் ஆயினும் கௌரவமாக, ஒரு பைசாவையேனும் இழக்காமல் இஸ்லாமிய ஈரான்
நீட்டும் நட்புக்கரத்தை பற்றி அதன் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு தயாரில்லை.
இந்த நாடோடி அரபிகள் தங்களது முன்னோர்கள் பல
தசாப்தங்களாக செய்ததை செய்வதிலேயே திருப்தி காண்கின்றனர். அதாவது உதைத்து தம்
பற்களை உடைக்கும் பூட்ஸ் கால்களை நக்கிக்கொண்டும் இருப்பார்கள். தொடர்ந்தும், அடிக்குமேல் அடிவாங்குவதில் அவர்களுக்கு எந்த
அவமானமும் தெரிவதில்லை. புன்னகைத்துக்கொண்டே அடிகளை வாங்கிக்கொண்டு இருப்பார்கள், இந்த அடிமட்ட அடிமைகள்.
Rabi'
al-Awwal 16, 1440
No comments:
Post a Comment